தனியார் துறையினரால் அரிசி விலையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று பிரதியமைச்சர் அமீர் அலி கூறுகின்றார்.
எதிர்வரும் நாட்களில் அரிசியை இறக்குமதி செய்து கட்டுப்பாட்டு விலையை பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறுகின்றார்.
ஒப்பீட்டளவில் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரிசி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் இருக்கின்ற அரிசி, சரியான முறையில் விநியோகிக்கப்படாமையின் காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளதென்று அரிசி வர்த்தகர் ஒருவர் கூறினார்.
எவ்வாறாயினும் அமைச்சரவை அனுமதிப்படி, அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் இருக்கின்ற நெற்களில் ஒரு தொகையை விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அமீர் அலி கூறுகின்றார்.