நுரையீரலை தானம் கொடுத்துத்த 41 நாள் குழந்தை!

பிறந்து 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தனது நுரையீரலை தானம் கொடுத்து உலக வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஒரு பெற்றோருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு தியோ ஆர்மோண்டி எனப் பெயர் சூட்டினார்கள். 40 நாட்கள் வரை நன்றாக இருந்த அவனுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவர் உயிர்பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறினார்கள். இதனால் அவனது பெற்றோர் அவனது நுரையீரலை தானம் செய்ய முடிவு செய்தனர்.

இமோகன் போல்டன் என்ற ஐந்து மாத பெண் குழந்தை ஒருவகை அரிய நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் அவளது நுரையீரல் சரியாக செயல்படவில்லை. அவருக்கு இரண்டு முறை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் உடல்நிலை பூரணமாக குணமடையவில்லை.

தற்போது தியோவின் நுரையீரல் தானமாக கிடைக்கப்பட்டுள்ளதால், இமோகனுக்கு மூன்றாவது முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆர்மோண்டி தனது நுரையீரலை தானம் கொடுத்துள்ளதால், மிகச்சிறிய வயதில் அதாவது 41-வது நாளில் உடல் உறுப்பை தானம் செய்த பச்சிளம் குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளார்.

Related Posts