சிறைச்சாலைக்குள் கஞ்சாவுடன் சென்ற பெண் கைது

50 கிராம் கஞ்சா பொதியினை 500 கிராம் மிக்சர் பக்கெற்றுக்குள் மறைத்து, சிறைச்சாலைக்குள் கொண்டு சென்ற அல்லைப்பிட்டி வெண்புரவி மீள்குடியேற்றப்பகுதியினை சேர்ந்த பெண்ணை, புதன்கிழமை (21) மாலை கைதுசெய்த சிறைச்சாலை அதிகாரிகள், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வெண்புரவி மீள்குடியேற்றப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்கு வந்த போது, தெரிந்த ஒருவர், இந்த உணவுப் பொதியினை சிறைச்சாலையிலுள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு கூறி கொடுத்தாக, கைதுசெய்யப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

உணவு பொதியினைக் கொடுத்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Related Posts