ஸ்டெட்டின்ஸ் (STATINS) மாத்திரையை பாவிக்க வேண்டாம் என எச்சரிக்கை

ஸ்டெட்டின்ஸ் (STATINS) இருதயநோய் தடுப்பு மருந்துகளை தேவையில்லாத நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக முழுவதும் சுமார் 8 இலட்சம் மக்கள் குறித்த மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இம் மருந்தானது 65 வயதிற்கு மேற்பட்டவர்களும், கடுமையான இருதய நோய் இருப்போரும் பயன்படுத்தும் மருந்தாகும்.

64 வயதிற்குட்பட்டோர் சுமார் 24 வருடங்கள் தொடர்ச்சியாக கடுமையான இருதய நோய் மற்றும் பக்கவாதம் என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை தடுப்பதற்கு இம்மருந்தை பயன்படுத்த அரச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த மருந்தை நடுத்தரமான இருதய நோயாளர்கள் அருந்தும் நிலையில் அவர்களுக்கு தசை வலிகள், ஞாபக மறதி மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்தும் என அறிவியல் நாளேடு மற்றும் கிழக்கு அங்கேலிய பல்கலைகழகங்களின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3 மில்லியனுக்கும் அதிகமானோர் தீவிரமான இருதய நோய் இல்லாத நிலையிலேயே குறித்த மருந்தை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts