போகிமான் கோ (Pokemon Go) இப்போது இலங்கையில்

ஸ்மார்ட்போனில் வெற்றி பெற்ற விளையாட்டாக திகழ்ந்து வரும் “போகிமான் கோ” என்ற விளையாட்டு உத்தியோகப்பூர்வமாக இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் , பூட்டான் மற்றும் பங்களாதேஷில் உள்ள விளையாட்டாளர்கள் இந்த விளையாட்டை app ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விளையாட்டு ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்தது. குறித்த விளையாட்டை தடை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் உள்ள சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

உலக அளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் கடந்த மாதம் போகிமான் கோ பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts