வடமராட்சி பொற்பதி பகுதியில் நேற்று முன்தினம் குடும்பப்பெண்னை வெட்டிக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே குறித்த பெண்ணைக் கொலை செய்தவர் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கிலே பெண்ணைக் கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மோப்பநாயின் உதவியுடன் கொலையாளியின் வீட்டில் உள்ள தென்னைமரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தக்கறையுடனான சேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.