சங்கத்தானை விபத்து: இ.போ.ச பஸ் சாரதிக்கு பிணை

சங்கத்தானை பகுதியில், கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இ.போ.ச பஸ் சாரதியை, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிபிள்ளை, நேற்று அனுமதி வழங்கினார்.

மேலும், இந்த விபத்துடன் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை, நீதவான் ஒத்திவைத்தார்.

இதேவேளை, வழக்கு விசாரணையின் போது, விபத்தை நேரடியாகக் கண்ட மூவரின் சாட்சிகளும், நீதவான் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.

கடந்த சனிக்கிழமை (17), யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸூடன், வான் ஒன்று மோதியதில், தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் 11 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts