மகிந்தராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் இளையராஜா யாழ் வருகை!

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கிணங்க தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜா யாழ்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவரினை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு, மகிந்த ராஜபக்ஷவின் விசுவாசியும், ஏசியன் ரிபியூன் இணையத்தள செய்தி ஆசிரியருமான கே.பி.ராஜசிங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், சிங்கள அரச தொலைத்தொடர்பு சேவையின் ஏற்பாட்டில் தென்னிந்தியப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து இசைக்கச்சேரி ஒன்றையும் நடாத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவர மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts