2 இலட்சம் ரூபாவை விழுங்கிய யானை

யால தேசிய வனாந்தரத்தில், மிருகங்களை பார்வையிடுவதற்கு சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அடங்கிய இரண்டு ஜோடியினரின் வெளிநாட்டு நோட்டுக்கள் மற்றும் கெமராக்கள் அடங்கிய பொதியை கெமுனு என்ற யானை விழுங்கிவிட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர், தங்களுடைய இரண்டு மனைவிகளுடன் சபாரி ஜீப் வண்டியில், யால பட்டநங்கல எனுமிடத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது, சபாரி ஜீப் வண்டியை, கெமுனு என்ற யானை வழிமறித்து நின்றுள்ளது. இதனால், அவ்வண்டியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

எனினும், தன்னுடைய தும்பிக்கையை வண்டிக்குள் போட்ட கெமுனு யானை, வண்டிக்குள்ளிருந்த பயணப்பொதியை எடுத்து விழுங்கிவிட்டது.

இந்த பயணப்பொதியில் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்கள் இருந்தததுடன் கமெராக்களும் இருந்ததாக அவர்கள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

அதிலொருவர், யானையின் இந்த நடவடிக்கையை துணிச்சலுடன் வீடியோ செய்துகொண்டுள்ளார். அதனை, வனஜீவராசிகள் திணைக்களத்திடம் காண்பித்து கடிதமொன்றையும் பெற்றுச்சென்றுள்ளனர்.

அக்கடிதத்தை, கொழும்பில் உள்ள ஜேர்மன் தூதுவராலயத்தில் காண்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

Related Posts