ஆசிரியர் பிரச்சனை தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் அக்கறையற்றவர்!

சில ஆசிரியர்கள் பத்து வருடங்களாக பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். சில ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் ஒரு நாள் மட்டும் வேலை செய்து விட்டு இடமாற்றம் பெற்று செல்கின்றனர். என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்றய தினம் ஆனைப்பந்தியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண ஆசிரியர் சங்க கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை ஆசிரியர் சங்கம் 2 மாதங்களுக்கு முன்னரே எமக்குரிய பதில்ஈடுகளை தயார் படுத்துமாறு கோரி இருந்தபோதும் தற்போதுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தற்போது தீவக பகுதிகளில் இருந்து 59 ஆசிரியர்கள், கிளிநொச்சியில் 100 பேர், துணுக்காயில் 47 பேர், முல்லைத்தீவு பகுதியில் 28பேர், மன்னார் பகுதியில்5பேர், மடுவில் 55பேர், வவுனியா வடக்கில்29பேர், வவுனியா தெற்கில 21பேர் என மொத்தமாக344 ஆசிரியர்கள் யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய பிரேதேசங்களுக்கு இடமாற்றம் பெற்று வர உள்ளனர்.

ஆயினும் இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு 53 பேர் மாத்திரமே செல்லவுள்ளனர். அதாவது யாழ். வலயத்தில் இருந்து 10 பேர், வலிகாமம் பகுதியில் இருந்து 22பேர், வடமராட்சி பகுதியில் 14 பேர், தென்மராட்சி பகுதியில் 7 பேர் செல்லவுள்ளனர். இதுவே இங்கிருக்கும் பாரிய பிரச்னை. இது அதிகாரிகளுக்கும் தெரியும். இதனை அவர்கள் கண்டு கொள்வதில்லை.

எனவே எதிர்வரும் ஜனவரி முதலாம் தவணைக்காக பாடசாலை தொடங்கும் போது இடமாற்றம் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படாது விட்டால் பாடசாலை தொடங்கி இரு வாரங்களுக்குள் ஆசிரியர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்.

மேலும் புதிய நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு யாழ். மாவட்டத்தில் நியமனம் வழங்கப்படுகிறது. இதனால் யாழ். மாவட்டத்தில் மேலதிகமாக ஆசிரியர்களும் ஏனைய பிரேதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறையும் காணப்படும்.

இவ்வாறான விடயங்களில் உரிய தீர்வை பெற்று கொடுக்க வடக்கு மாகாண சபை பின்னிக்கிறது. வடக்கு முதல்வர் காட்டுகின்ற ஆர்வத்தினை வடமாகாண கல்வி அமைச்சர் காட்டுவதில்லை. கஷ்டப்பட்ட பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்களின் இடமாற்றத்தினை முதலில் கவனத்தில் எடுக்க வேண்டும். சில ஆசிரியர்கள் பத்து வருடங்களாக பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர்.

சில ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் ஒரு நாள் மட்டும் வேலை செய்து விட்டு இடமாற்றம் பெற்று செல்கின்றனர். இது மிகவும் பிழையான விடயம். எனவே இடமாற்ற சபை இது தொடர்பில் உறுதியான தீர்மானம் எடுத்து. உரிய கவனம் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Related Posts