நீதித் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் நியாயமான சம்பள முறையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.
நீதித் துறையில் பணியாற்றுவோருக்கு நியாயமான சம்பள முறையொன்று இல்லாத குறைபாட்டை அரசாங்கம் அடையாளம் கண்டிருப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார்.
அதன்படி திறந்த மனதுடன் பக்கச்சார்பற்ற, சுயாதீன சேவையை மக்களுக்கு வழங்குவதற்காக அந்தத் துறையின் அனைத்து பதவி நிலைகளுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான சம்பள முறையொன்றை உருவாக்குவதற்கு, அரசின் கொள்கைக்கு அமைய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறினார்.
வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நீதிபதிகளின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
நிறைவேற்று அதிகாரம் எவ்வளவு தூரம் நீதித் துறையில் அழுத்தங்களை பிரயோகித்தது என்று கடந்த தசாப்தங்களில் அனைவரும் கண்டுகொண்டனர் என்று ஜனாதிபதி இங்கு மேலும் கூறினார்.