வறட்சி காலநிலையின் காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்தும் தேவையை மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்தினால் நாளாந்தம் 100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வருடத்தின் மே, ஜூன் மாதத்தில் போதுமானவளவு மழைவீழ்ச்சி இடம்பெறாவிட்டால் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் மின்சார விநியோகத்தை தூண்டிக்காது முன்னெடுப்பதற்கு இந்த சிக்கன பாவனை முறை உதவும் என்று அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.பட்டகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் :
தற்பொழுது முக்கிய நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. நாட்டின் நாளாந்த மின்சார தேவை இரண்டாயிரத்து 300 மெகாவோட்சாகும். இந்த தேவையை 24 மணித்தியாலமும் முன்னெடுப்பதற்கு தேவையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பாரியளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை கொண்டுள்ள நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது ஒரு மின் அலகை 36 ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்கு சபை திட்டமிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூலம் 900 மொகா வோட்ஸ் மின்சாரம் தேசிய மின் வலைப்பின்னலுடன் சேர்க்கப்படடகிறது.
நீர் மின் உற்பத்தியின் மூலம் 300 மெகாவோட்ஸ் இதற்கு முன்னர் பெறப்பட்டு;ள்ளது. ஆனால் தற்போது இந்தத் தொகை 40 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் செயலாளர் கூறினார்.
டீசல் மூலமான மின் உற்பத்தியிலிருந்து 200 மெகாவோடஸ் மின்சாரமும் சிறிய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 300 மொகாவோட்ஸ் மின்சாரமும் காற்றின் மூலம் 120 மொகாவோட்ஸ் மின்சாரமும் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தியின் மூலம் 10 மொகாவோட்ஸ் மின்சாரமும் தேசிய மின் வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படுவதாக செயலாளர் தெரிவித்தார்.