5000 ரூபா தொடர்பில் வெளியான தகவல் உண்மையல்ல!

இலங்கையிலுள்ள 5000 ரூபா நாணயத் தாள்களை இந்தியாவைப் போன்று செல்லுபடியற்றதாக ஆக்கப் போவதாக தான் கூறவில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மறுத்துரைத்தார்.

நேற்று நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

கடந்த காலத்தில் காணப்பட்ட எதிர்க் கட்சியின் சில தவறான நிதி முன்னெடுப்புக்கள் பற்றியே நான் விளக்கமளிக்க முற்பட்டேன். இதனை சில ஊடகங்கள் தவறாக புரிந்துள்ளன. இவ்வாறான அறிவித்தல் மூலம் மக்கள் குழப்பமடைவர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts