எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஒரு கிலோகிராம் அரிசி 60 ரூபாவிற்கு விற்பனை செய்ய எதிர்பார்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.
அரசின் வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின் போது சந்தையில் காணப்படுகின்ற அரிசி விலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
இந்தமுறை உயர் பருவகாலத்தில் தேவையான மழை பெய்யவில்லை என்பதனால் அடுத்த ஆண்டு உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
அந்த நிலமையை எதிர்கொள்வதற்காக இருக்கின்ற நெற்தொகையை பாதுகாக்க வேண்டும் என்பதால் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் அமரவீர கூறினார்.
அதன்படி எதிர்வரும் 2 மாதங்களுக்குள் சந்தையில் அரிசியின் விலை குறையும் என்று, இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பிலியந்தலை விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.