கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்த இருவர், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும் 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 18 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னவால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு, மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.