பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான இருவர் யாழில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2009 ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முள்ளியவளையைச் சேர்ந்த பாஸ்கரன் வனஜன் மற்றும் யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த பொன்னையா சிதம்பரநாதன் ஆகிய இருவருமே விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவார்.

இவர்களில் வனஜன் என்பவர் கடந்த 18.05.2009 அன்றும், சிதம்பரநாதன் என்பவர் 17.05.2009 அன்றும் ஓமந்தை பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவருக்கெதிராக போடப்பட்டிருந்த வழக்கு நேற்று யாழ். உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த இருவரையும் விடுதலை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

Related Posts