ஜெயலலிதாவிற்கு வடமாகாண சபையில் அஞ்சலி

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

north

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அஞ்சலி உரையை நிகழ்த்தினார்.

வட மாகாண சபையின் 67வது அமர்வு இன்றைய தினம் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இன்றைய சபையமர்வின் ஆரம்பத்திலேயே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், வடமாகாணசபை சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அஞ்சலி உரையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்த்தினார்.

முதலமைச்சரின் இந்த உரை தமிழகம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Related Posts