படையினர் கோபத்தில் இருக்கிறார்கள், அவர்களை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடாதீர்கள் என சிவாஜிலிங்கம் குழுவினருக்கு பொலிஸார் அறிவுறுத்தி விடுதலை செய்துள்ளனர்.இது குறித்து கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்க அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் 2 மணி நேரத்திற்கு மேல் காவல் நிலைய சிறைக்கூண்டில் அடைக்கப்பட்ட தாம் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களையும், படுகொலைச் சம்பவத்தையும் நினைவுகூரும் வகையில், அஞ்சலி சுவரொட்டிகளை நெல்லியடி நகரப் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்த போது சிவாஜிலிங்கமும் அவருடன் இருந்த எட்டுப் பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.