க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதாகவும், வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கமைய நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் ஏழு லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இதற்காகவேண்டி 65524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சார்த்திக்குப் பகரமாக, அவரின் பெயரில் வேறு ஒருவர் பரீட்சைக்குத் தோற்றினால் பரீட்சை மண்டபத்திலேயே வைத்து பொலிஸாரினால் அவர் கைது செய்யப்படுவர். பரீட்சை நிலைய கண்காணிப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.