சிறையில் அடைக்கப்படும் முக்கிய பிரமுகர்களுடன் சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகசுகாதார போஷாக்கு சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படும் முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க மருந்து கூட்டுத்தாபனத்தின் கம்பஹா மாவட்ட கிளை அலுவலத்தை திறந்து வைக்கும் வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இது விடயம் தொடர்பாக விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்த அமைச்சர்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.