அமெரிக்க உப ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிற்கு தீடீர் தொலைபேசி அழைப்பு

அமெரிக்க உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பை வழங்கவும் அமெரிக்கா தயாராகவுள்ளதாக, அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts