யாழில் இயங்கும் ஆவா எனும் குழு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேரையும் சரீரப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அண்மைக் காலங்களில் யாழில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா எனும் குழு தொடர்புபட்டுள்ளதாக, தகவல் வௌியானது.
இதற்கமைய, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் குறித்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.