2011ஆம் ஆண்டின் உயர்தர பெறுபேற்றின் இஸட் புள்ளியை ரத்து செய்யுமாறு உயர்தர மாணவர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி;.கனகராஜ் தெரிவித்துள்ளார்.கடந்த வருட உயர்தர பெறுபேற்றில் குளறுபடிகள் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் உயர்தர பெறுபேற்றிலும், இஸட் புள்ளிகளின் நம்பகத்தன்மையினாலும் குழப்பமடைந்துள்ளனர்.
இதனால் அண்மையில் வெளியிடப்பட்ட இஸட் வெட்டுப் புள்ளிகளினால் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் சிக்கல்கள் காணப்படும் நிலையில் பழைய பாடத்திட்ட இஸட் வெட்டுப்புள்ளியை ரத்து செய்யுமாறு கோரி இன்று பல மாணவர்கள் தகமை சான்றிதழ்கள் சகிதம் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.