இன்று முதல் உணவுப் பாதுகாப்பு வாரம்

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரையின் பேரில் உணவுப் பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 3ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தூர இடங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் நிறுத்தும் இடங்களிலுள்ள உணவகங்களில் இக் காலப் பகுதியில் விஷேட சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, குடி பாணங்களில் வர்ணக் குறியீடுகள் இடப்படுவது தொடர்பிலான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த சட்டத்தை மீறும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts