இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இதுவரை தேசிய ஆள் அடையாள அட்டை பெறாதுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தே. அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக இன்று (28) விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.