வழமையான தொலைபேசி அழைப்புகளிற்கு மாறாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றமையே இணையத்தளத்திற்கான வரி அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அத்தொகை அதிகமானது அல்லவெனும் அவர் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியப்படுத்தியிருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எம்மோடு தொலைபேசி நிறுவனங்கள் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது தொலைபேசி அழைப்புகளிற்குப் பதிலாக அதிகமானோர் வைபர் மற்றும் வட்ஸ்அப் இனைப் பயன்படுத்தி வருவதால் தமது வருமானம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஏனைய நாடுகளில் உள்ளதைப்போன்று சம மட்டத்திற்கு கொண்டுவருவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் இதன்மூலம் அரசாங்கத்தின் வருமானத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புரிய வரி அதிரிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு 100ரூபா டேரா பாவனைக்கும் 50 ரூபா வரியாக அறவிடப்படவுள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது,
அதற்கு பதிலளித்த அமைச்சர், இதற்கு முன்னர் இதனை ஒத்த தொகை வரியாக அறவிடப்பட்டதாக தெரிவித்தார்.