இலங்கை அணிக்கு அபராதம்

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீச்சை நிறைவு செய்யாமை (slow over-rate) காரணமாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நேற்றுதினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின.

இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில், ஒரு ஓட்டத்தால் இலங்கை த்ரில் வெற்றியை கடைசி நிமிடத்தில் பதிவு செய்தது.

இந்தநிலையில் பந்து வீச்சுக்காக இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் நிறைவுடையும் வேளை, மேலும் இரண்டு ஓவர்கள் பந்துவீச வேண்டி மீதமிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வீரர்களுக்கும் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 10 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணித் தலைவருக்கு இது இரண்டு மடங்காகும். இதன்படி உபுல் தரங்கவுக்கு 20 வீத போட்டிக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இரண்டு ஓவர்கள் பந்து வீச தாமதமானமையால் அணித் தலைவர் உபுல் தரங்கவின் சம்பளத்தில் 40 வீதமும் ஏனைய வீரர்களின் சம்பளத்தில் 20 வீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts