உதயன் பத்திரிகை ஆசிரியரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான வழக்கு விசாரணைகளிலிருந்து தான் விலகிக்கொள்வதாக யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா உயர்நீதிமன்றுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதியிட்டு அவர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில்,தான் குறித்த வழக்கு விசாரணைகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொள்வதாகவும்,இதானால் தன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களிலிருந்து விடுவிக்கும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.