பாடப்புத்தகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படும் தமிழர் வரலாறு

பாடசாலை மாணவர்களின் பாடப்புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு மூடி மறைக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார். சில புத்தகங்களையும் தம்வசம் கொண்டுவந்த சிறிதரன் அதனையும் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

மாணவர்கள் மத்தியில் அந்நிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் தவறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறிதரன், தரம் 7 தொடக்கம் 10 வரையிலான பாடப்புத்தகங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறுகள் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

வரலாறு திரிபுபடுத்தப்பட்டு, மாற்றப்பட்டு பலவந்தமான திணிக்கப்படுவதனால், இனங்களுக்கு இடையில் கசப்பான உணர்வுகளே தோற்றுவிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தின் பிடியிலுள்ள பலாலி ஆசிரியர் கலாசாலையையும் விடுவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இன்போது வலியுறுத்தினார்.

Related Posts