க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம் சித்தியடையாத மாணவர்களும், கலைத்துறையில் தரம் 13 வரை கல்வி பயில்வதற்கு ஏதுவாக, புதிதாக 24 பாடங்களை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று (22) கல்வி அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
ரெபோடெக் தொழில்நுட்பம் உட்பட 24 பாடங்கள் இதன்போது அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு உயர் தரக் கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கின்றது. இந்த 24 பாடங்களில் மூன்றைத் தெரிவு செய்யும் மாணவர்களுக்கு கணிதப் பாடம் சித்தியடைய வேண்டும் என்ற தேவையில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.