நல்லிணக்கத்து பங்கம் விளைவித்தால் உடன் கைது!

மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மக்களைத் தூண்டி விடுபவர்களை விசாரணை செய்ய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் குறித்த பிரிவில் இருந்து விசாரணைகளை மேற்கொள்வார்.

மதம், இனங்களுக்கிடையில் அகௌரவத்தை ஏற்படுத்தும் விதத்தில் மக்களை தூண்டி விடுபவர்கள் பற்றி விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானவர்கள் தகுதி பாகுபாடு இன்றி கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இன மற்றும் மத ரீதியில் மோதலை ஏற்படுத்த அமைப்பு ரீதியில் குழுக்கள் முயற்சித்து வருவதாக கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து இந்த விசேட பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts