Ad Widget

பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஈழத் தமிழரான ஜெயக்குமார் என்பவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் லாச்சப்பல் பகுதியில் மாவீரர்நாள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தவேளையிலே இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞன்மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

வாள் வெட்டில் காயமடைந்த இளைஞர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் காவல்துறையினர் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts