மாணவர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள தடை

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களிடமிருந்து, ஆசிரியர்கள் பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விழாக்கள் மற்றும் பிறந்த நாள் நிகழ்வுகளின் போது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பெறுமதியான பரிசுபொருட்கள் வழங்குவது வழமையாக இருந்து வருகின்றது.

எனினும் அடுத்த வருடம் முதல் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் யாரும் பரிசுப் பொருட்கள் வழங்கக் கூடாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related Posts