நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் மாணவர் வரவில் திருப்திகரமற்ற மாணவர்களை பாடசாலையில் இணைப்பதற்கான முயற்சியானது நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைகளில் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்படி மாணவர்களின் வீடுகளுக்குச்சென்று பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பணர்வும் இதன்போது வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தின் போது வீடுகள் மற்றும் பொது இடங்களில் நின்ற மாணவ மாணவிகளுக்கு விழிப்பணர்வு வழங்கப்பட்டு பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பிரதேச செயலகத்தின் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் பிரதேச சிறுவர் பாதுகாப்ப உத்தியோகத்தர் சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தின் பிரதிப்பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கோட்ட கல்விக் குழு பொறுப்பாசிரியர் இந்த விழிப்பணர்வு நடவடிக்கையில் இணைந்திருந்தனர்.
இதேவேளை பாடசாலை மாணவர் வரவினை அதிகரிக்கும் முகமாக பிரதேச செயலகத்தினால் பல்வேறு வழிப்புணர்வு செயற்திட்டங்கள் பாடசாலை மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பிரதேச செயலாளர் தலைமையில் பெற்றோருடனான கலந்துரையாடல் கடந்தவாரம் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.