ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத் தளத்தை ஹக் செய்த இளைஞனை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத் தளத்தை ஹக் செய்த இளைஞனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார்.

hack-student-3

hack-student-2

hack-student-1

கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி குறித்த இணையத்தளத்தை ஹக் செய்து, இலங்கை இளைஞர்கள் என்ற பெயரில் அடையாளம் காணப்படாத குழுவினர் தகவலொன்றை பதிவிட்டிருந்தனர்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்துவதாகவும் நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுப் பெற்றுக்கொடுப்பதாகவும் பிரதமரைப் பற்றியும் ஹேக்கர் குழுவினர் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் (ஊடுருவினார்) செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், மொரட்டுவையைச் சேர்ந்த 26 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், கடுகண்ணாவையில் வைத்து 17 வயதுடைய பாடசாலை மாணவனொருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த மாணவன் நேற்று பிற்பகல் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இச் சந்திப்பு ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது

இங்கு மாணவன் தெரிவிக்கையில் தானே உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கிய கணனியையே தான் பயன்படுத்துவதாக அம்மாணவன் தெரிவித்ததுடன் தனது குடும்பத்தவர் முகம்கொடுக்கும் வீட்டுப் பிரச்சினைகளையும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் பாதுகாப்பின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு இந்த நன்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் அந்த சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு தேவையான பின்னணி தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதன் போது குறித்த மாணவனுக்கு விசேட பரிசு ஒன்றையும் ஜனதிபதி வழங்கியுள்ளார்.

Related Posts