வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது பற்றி பாராளுமன்றக்குழு ஆராயவுள்ளது.
இதற்கென விசேட பாராளுமன்ற குழுஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.