மாதகல் கடற்கரை பகுதிக்கு அருகாமையில், ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வூர் மக்களால் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.
இதன்போது அந்தப் பெண்ணிடமிருந்து 09 கிலோவும் 305 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மாதகல் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.
சந்தெகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொஸிசார் மேற்கொண்டு வருகின்றனர்