யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மோதல் சம்பவத்தில் காயமடைந்த சிங்கள மாணவன் தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை ஏற்பாடு செய்தமையினால் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
இதன்போது காயமடைந்த சிங்கள மாணவன் ஒருவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமிழ், சிங்கள மாணவர்களால் எதிர் எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரனை இடம்பெற்று வரும் நிலையில் நேற்றைய வழக்கு விசாரனையானது யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.