தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படங்களுமே ரசிகர்களுக்கு 100 சதவிகிதம் திருப்தி கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நடிகர்களுமே நினைப்பார்கள்.
அதிலும் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் கதை விசயத்தில் இன்னும் கவனமாக இருப்பார்கள்.
அந்த வகையில், விஜய்யைப்பொறுத்தவரை ஒரு படத்திற்கான கதையை செலக்ட் பண்ணுவதில் அதிக காலஅவகாசம் எடுத்துக்கொள்கிறார். முக்கியமாக, எந்தவொரு இயக்குனர் ஹிட் படம் கொடுத்தாலும் உடனே அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துகிறார்.
அதையடுத்து, நல்ல கதை இருந்தால் வாருங்கள் பேசலாம் என்றும் அழைக்கிறார்.
அப்படி அழைத்து கேட்கும் விஜய், அவர்கள் சொல்லும் கதை தனக்கு பிடித்து விட்டால் சரியான நேரம் வரும்போது அவர்களை அழைத்து கால்சீட் கொடுக்கிறார்.
ஒருவேளை அவர்கள் சொன்ன கதை தனக்கு பிடிக்காதபட்சத்தில் பின்னர் அவர்களை தொடர்பு கொள்வதே இல்லையாம்.
அந்த வகையில், விஜய்யை சந்தித்து கதை சொன்ன செல்வராகவன், கே.வி.ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ், ரத்தின சிவா உள்பட பல டைரக்டர்கள் விஜய்யிடம் கதை சொல்லி விட்டு அவர் எப்போது வேண்டுமானாலும் தங்களை அழைக்கலாம் என்கிற மனநிலையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.