யாழ். பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு மாநாடு

போருக்கு பின்னர் முதன் முதலாக யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.இன்று நாளையும் நடைபெறும் இம்மாட்டில் இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்கின்றனர்.இச்சர்வதேச ஆய்வு மாநாட்டிற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் யாழ்.ரில்கே விடுதியில் நடைபெற்றது.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்த அரசரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய உயர் கல்வியமைச்சர் S.B.திசநாயக்க,
“இது வடக்கு கிழக்கில் மனித வள அபிவிருத்தியை ஏற்படுத்தும் ஒரு மாநாடு. இது யுத்தம் முடிவடைந்த சூழலில் இடம்பெறுகின்றது. சமூக பொருளாதாரம் அபிவிருத்திக்கு மாத்திரமில்லாமல் அமைதிக்கும், சமூக வாழ்விற்கும் உரியதாகும். இது மனித வள அபிவிருத்தியிலும் பௌதீக முறையிலும் ஸ்தாபனங்களுக்கிடையிலான நல்லுறவிலும், ஸ்தாபனங்களை கட்டியெழுப்புவதிலும் உண்டாகின்றது.
விவசாயம், அடிப்படை விஞ்ஞானம், முகாமைத்துவம், சுகாதாரக் கல்வி, சமூக விஞ்ஞானம், தகவல் தொடர்பாடல், போன்ற துறைகளின் ஊடாக கடந்த கால பிரச்சனைகளையும் இன்றைய நாட்களின் சவால்களையும் பார்க்க வேண்டும். இது போன்று தனியார் துறையிலும் பொதுத்துறையிலும் மனித வள அபிவிருத்தி இந்த வெளிச்சத்தில் காணப்பட வேண்டும்.
இன்றுள்ள உலகம் முன்னெப்போதும் இல்லாததை விட போட்டியானதாகும். உலக பொருளாதாரத்திற்கு ஏற்ப எமது அறிவை பெருக்க வேண்டும். இந்த மாநாட்டை கூட்டி சர்வதேச நிலைக்கு அறிவை வளர்ப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.
இம் மாநாட்டை கூட்டியதற்காக துணைவேந்தர், மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு நான் நன்றியுடையவனாக உள்ளேன்” என்றார்.

மேலும் நிகழ்வில் உரையாற்றிய இந்திய துhதரக அதிகாரி அசோக் கே காந்தா,
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 2012இல் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். யுத்தம் முடிவடைந்த சூழலில் தகுதியை மேம்படுத்துகின்றோம். இதில் பல்வேறு நாடுகளிலும் இருந்து வருகை தந்துள்ள 700க்கும் மேம்பட்ட விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் பங்குபற்றுகின்றனர்.
இவ் ஆய்வு மாநாடு யுத்தம் முடிவடைந்த சூழலில் இலங்கையில் உட்கட்டமைப்பு தகுதியை கட்டியெழுப்பும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
2009 இல் இருந்து 15 தடவைகளுக்கு மேல் யாழ்ப்பாணம் வந்துள்ளேன். 3 தசாப்த யுத்தத்pன் பின் இங்கு இடம்பெற்றுள்ள அபிவருத்திகள் ஆழமாக என்னை கவர்ந்துள்ளது.
நான் நேரடியாகவும் அவற்றைக் கண்டுள்ளேன். 3 லட்சமாக இருந்த உள்ளுரிலேயே இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஐயாயிரமாக குறைந்துள்ளது. இங்கு மீள் கட்டுமானம் இடம்பெறுவதையும் கண்டுள்ளேன். இருந்தும் இப்போதும் புனர்நிர்மாணம், இணக்கப்பாடு என்பன
சவாலாகவே உள்ளன. நல்ல நாடாகிய இலங்கை புனர்நிர்மாணம், இணக்கம், சமாதானம் என்பவற்றை அடையும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
நான் உறுதியாக சொல்கின்றேன். இங்கு அபிவிருத்தி நன்றாக நடைபெறுகின்றது. ஒளிமயமான வாழ்விற்கு அபிவிருத்தி அவசியம். ஆனால் அபிவிருத்தி மட்டும் போதாது ஐக்கியமும் தேவை. அதற்கு எல்லோருக்கும் சமவுரிமை, சமபங்கு என்பன தேவை. இலங்கை ஒரு அழகான நாடு. மனித திறமையும் வளமும் மிக்க நாடு. இந்நாடு ஐக்கியமாக இருக்கும் போது தெற்காசியாவில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் சிறப்பான நாடாகவிருக்கும்” என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“நாங்கள் மிகப்பெரிய முரண்பாட்டில் இருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறோம். 3 தசாப்பங்களுக்கு மேலாக எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக நாங்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
பெருமளவு மனித வளங்களை இழந்துள்ளோம், பாரிய இடப்பெயா;வுகளைச் சந்தித்தோம். உளவியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். இவற்றை விட வாh;த்தைகளால் வா;ணிக்க முடியாத பல இழப்புகளை நாங்கள் சந்தித்துள்ளோம். எங்கள் கண் முன்பாகவே பலா; செத்து வீழ்ந்ததை காணும் துh;பாக்கியம் எமக்கு கிடைத்தது. தினந்தினம் எமது மக்கள் வாhத்தைகளால் வா;ணிக்க முடியாதளவு துன்பங்களை அனுபவித்து வந்தனா;.

இன்று இத்தகைய நீடித்த அவலங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. காயங்கள் ஆறிக்கொண்டு இருக்கின்றன. தற்போது மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழிகாட்டலுடன் அபிவிருத்தி மீள்கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

விசேடமாக போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல நாடுகள் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு உதவி வருகின்றன. குறிப்பாக எமது அயல் நாடான இந்திய மிகக் கூடிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாடு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல்கலைக்கழகம் கல்விச் செயற்பாட்டையும் தாண்டி தற்போதைய சூழல் மற்றும் தேவை குறித்து தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளது.ஆகவே உங்களுக்கு இருக்கின்ற அறிவை பயன்படுத்தி இந்த நாட்டை மீள கட்டியெளுப்ப உதவுங்கள்” என்றார்.

நேற்றைய ஆரம்ப நிகழ்வினைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடுகள் இடம்பெற்றன. விவசாயம்,பிரயோக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தூய அறிவியல், சமூக அறிவியல் ஆகிய துறைகளில் ஆய்வரங்கங்கள் இடம்பெற்றன.

Related Posts