‘ஆவா’ என்ற பெயரில் குழுவொன்றை அமைத்து, யாழ்ப்பாணத்தில் வன்முறையைத் துண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்காக தற்போது மொத்தம் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.