யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இவரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் காங்கேசன்துறையில் வைத்து நேற்று பிற்பகல் வேளையில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் ஆவா குழுவுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கொழும்பில் இருந்து வரும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் சந்தேகத்தின் பெயரில் இவர்களை கைது செய்கின்றனர்.
நேற்று முன்தினம் யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நேற்றுடன் மொத்தமாக பத்துப்பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது