யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்ற வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்களைக் குறித்த நிறுவனப் பணியாளர்கள் முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை தடுத்து வைத்திருந்த சம்பவம் பொன்னாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவற்றை விட ஒரு படிமேல் சென்று கடனைச் செலுத்த முடியாவிட்டால் தற்கொலை செய்யுங்கள் அப்படிச் செய்தால் கடனில் இருந்து விலக்களிக்கப்படும் நிறுவனத்தில் நாங்களும் தப்பிப்போம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது
யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் பொன்னைாலைக்குச் சென்று அங்குள்ள பெண்களுக்குக் கடன் தரலாம் என்று தூண்டி ஆசை காட்டியுள்ளனர். ஐந்து பெண்கள் சேர்ந்து கடன் பெற்றால் ஐவரும் வாராந்தம் பணத்தைச் செலுத்த வேண்டும். ஒரு இலட்சம் ரூபா கடன்பெற்றால் வாராந்தம் 2700 ரூபா வீதம் அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இது அவர்களின் நிபந்தனை.
பொன்னாலையில் இவ்வாறு ஐந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து கடன் பெற்றனர்.கடந்த புதன்கிழமை கடன் பணத்தை அறவிடுவதற்காக பொன்னாலைக்Fச் சென்ற குறித்த நிதி நிறுவனப் பணியாளர்கள் இருவர் அங்குள்ள சனசமூக நிலையம் ஒன்றுக்கு ஐந்து பெண்களையும் அழைத்தனர்.
அவர்களில் மூவர் பணத்துடன் சென்ற போதிலும் ஏனைய இருவரிடம் பணம் இருக்கவில்லை அந்த இருவரரயும் பணத்தைக் கைம்மாறாகப் பெற்று வருமாறு திருப்பி அனுப்பிய குறித்தபணியாளர்கள் அவர்கள் பணத்தைக் கொண்டுவரும் வரை ஏனைய மூவரும் வீடு செல்ல முடியாது என்று தடுத்து வைத்திருந்தனர்.
ஆனால் அந்த இருவரும் எங்கும் பணம் பெற முடியவில்லை. இதனால் சனசமூக நிலையத்தில் நிற்க மற்றைய பணியாளர் இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு அங்குள்ள வீடுகளுக்குச் சென்று வீட்டுக்கு வீடு நூறு ரூபா வீதம் தாருங்கள் என்றார். நீங்கள் ஒரு நாள் சீனி, மா, பாண் வாங்கும் பணத்தை இவர்களுக்கு கொடுங்கள். இவர்கள் இன்று கடனைச் செலுத்தட்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். கடனைச் செலுத்த முடியாவிட்டால் எங்களுடன் வாருங்கள் நாங்கள் கடனைச் செலுத்துக்றோம் என்று ஆபாச வார்த்தைகளைப் பாவித்து வசைபாடியுளள்னர்.
இந்த நிறுவனப் பணியாளர்களின் செயற்பாட்டை அறிந்த சமூக நலன்விரும்பிகள் கடும் விசனம் வெளியிட்டனர். வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களைத் தேடிப் பிடித்து கடன்கொடுக்கும் நிதி நிறுவனங்கள் பின்னர் அவர்களைக் கடும் சிரமத்துக்கு உள்ளாக்கின்றனர்.
இவர்களது செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.