Ad Widget

கனேடிய இலங்கையரிடம் அதிக வருமான ஆசை காட்டி பணத்தை சுருட்டிய சிங்களப் பெண் கைது

அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி கனடாவில் பலரின் பணத்தை ஏப்பம் விட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 52 வயதுடைய சிங்களப் பெண் ஒருவருக்கு கனேடிய நீதிமன்றம், ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

janaki-canada

அதேவேளை மூன்று மில்லியன் கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முஸ்கொகா என்ற இடத்தில் ஆடம்பர விடுதிகளை அமைப்பதாகக் கூறி 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை குறுகிய கால முதலீடுகளுக்கு 60 வீதத்திற்கும் அதிகமான இலாபத்தை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி 5 தசம் 5 மில்லியன் டொலர் பணத்தை, 60 பேரிடம் பெற்று அவர்களை ஏமாற்றியதாக ஜானகி என்றழைக்கப்படும் 52 வயதுடைய ஜயவதி உஸ்வத்தகே பெரேரா என்ற பெண் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.

கனேடிய பிரஜாவுரிமையைக் கொண்ட இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 52 வயதுடைய ஜயவதி உஸ்வத்தகே பெரேரா என்ற இந்தப் பெண், வீட்டு மனை வர்த்தகத்தில் முதலீட்டால் அதிக லாபம் உழைக்கலாம் என கூறியே, முதலீட்டாளர்களிடம் பணத்தைக் கரந்துள்ளார்.

சுழற்சி முறையிலான முதலீட்டு மோசடியிலேயே ஜானகி என்ற பெண் ஈடுபட்டுள்ளதாக அரச சட்டத்தரணி ரீனா வெய்ன்பேர்க் தெரிவித்துள்ளார்.

முதலில் சிலரிடம் அதிக வருமான ஆசையைக் காட்சி முதலீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ள இந்தப் பெண், அந்த முதலீடுகளுக்கான வருமானத்தை திருப்பிச் செலுத்துவதற்காக புதிதாக முதலீடுகளைப் பெற்றுக்கொண்டு அவர்களையும் ஏடாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இவரது முதலீட்டுத் திட்டத்தில் ஆயிரம் டொலர் முதல், ஏழு லட்சத்து 76 ஆயிரம் டொலர் வரை முதலீட்டவர்களும் இருப்பதாகவும், இவர்களில் அநேகமானோர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஏமாற்றித் திரட்டிய பணத்தில் ஒரு இலட்சம் டொலரை முதல் வகுப்பு விமானப்பயணச் சீட்டுகளுக்காகவும், 92 ஆயிரம் டொலருக்கு சொகுசு பி.எம்.மபிள்யு கார் வாங்குவதற்கும், சொகுசு வீட்டிற்கான முன் பணத்தை செலுத்துவதற்கும், பயன்படுத்தியுள்ளார்.

தன்னை வெற்றிகரமான வர்த்தகர் என பிரபல்யப்படுத்திக்கொண்டுள்ள ஜானகி என்ற குறித்த பெண், தனது வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக தனது சொகுசு மாளிகையில் அடிக்கடி விருந்துபசாரங்களையும் வழங்கியுள்ளார்.

அதேவேளை லெமோசின்ஸ் என்றழைக்கப்படும் அதி சொகுசு கார்களை வாடகைக்கு அமர்த்தி அடிக்கடி சூதாட்ட நிலையங்களுக்கும் சென்றுள்ளதாக அரச சட்டத்தரணி வெயின்பேர்க் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் தனது வாடிக்கையாளர்களில் சிலருக்கு இலங்கை சென்று வருவதற்கான விமானப் பயணச்சீட்டுக்களையும் வாங்கிக்கொடுத்துள்ளார். எனினும் திடீரென தனதுமுதலீட்டாளர்களுக்கான வருமானத்தையும், அவர்களது முதலீடுகளையும் திருப்பிக்கொடுக்காததை அடுத்தே ஜானகிக்க எதிராக முதலீட்டாளர்கள் முறைப்பாடை செய்துள்ளனர்.

இதற்கமைய 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி அவருக்கு எதிராக முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. எனினும் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே முதலாவது சிறைத் தண்டனை ஜானகி என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

Related Posts