Ad Widget

நவம்பர் 27 இல் யாழ் மாநாகர சபை திடலில் ஹோலிப்பண்டிகை! தனியார் நிறுவனம் நடாத்துகின்றது

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்துள்ளது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டுள்ளது.


இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எந்தவிதத்திலும் எமது இனத்துடனோ மதத்துடனோ சம்பந்தமற்ற கலாச்சாரத்தில் இல்லாத எமது மக்களுக்கு பொருத்தமற்ற ஒரு பண்டிகை யாழ் பிராந்தியத்தில் நடைபெறுவது வரவேற்கப்படக்கூடிய ஒன்றல்ல என்று எதிர்ப்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.இது கலாச்சார திணிப்பு என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

கோலிப்பண்டிகையானது வட இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொருத்தமற்ற பிரதேசத்தில் பொருத்தமற்ற காலப்பகுதியில் இங்கு தனியார் நிறுவனம் ஒன்று ஊடாக ஏற்பாடு செய்யப்படுவது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிகழ்வில் வேறு சில களியாட்ட நிகழ்வுகளும் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோலிப்பண்டிகை சம்பந்தமான மேலும் தகவல்களை ஆராய்ந்தால் எமது பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் சவால் விடக்கூடிய பல விடயங்கள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக இது பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக கூறப்படுகின்றது. இதில் பயன்படுத்தப்படும் சாயம் குறித்தம் கூட மருத்துவ உலகில் சர்ச்சைகள் உலவி வருகின்றது.அதில் நச்சுப்பொருடக்ள உள்ளதாகவும் உடலுக்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் மூலப்பொருள்கள் அதில் அடங்கியுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய தகவலின்படி இந்நிகழ்வுகள் நடாத்துவதற்கு அனுசரணை வழங்குவதில் இருந்து நல்லூர் Rotaract கழகம் பின்வாங்கி  விட்டதாக தெரியவருகின்றது.  இந்த நிகழ்வை குறிப்பிட் Event  நிறுவனத்திற்கூடாக ஒரு முன்னணி தனியார் தமிழ் வானொலிதான் முன்னெடுப்பதாகவும் தெரியவருகின்றது. இந்த நிகழ்வை நடாத்துவதால் குறித்த வானொலி நிறுவனத்திற்கு 8 லட்சம் வரிவிலக்கு கிடைப்பதாகவும் அதில் ஒரு லட்ச ரூபாயினை நல்லூர் Rotaract கழகத்துக்கு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.தற்போது தாம் அனுசரணை அல்லாத நிலையில் தமது கழகத்தின் சின்னத்தை விளம்பரங்களில் பயன்படுத்தவேண்டாம் என அவர்கள் கேட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இது தொடர்பில் யாழில் உள்ள இந்தியத்துாதரகம் தெரிவிக்கையில்,  தமக்கும் அந்த நிகழ்வுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளது .குறித்த நிகழ்வை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமாகாணசபை முதலமைச்சருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் முறைப்பாடுகளை சில சமூக ஆர்வலர்கள் அனுப்பிவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்வை இடைநிறுத்துவதாக பதிவை போட்டு விட்டு அதை அவர்கள் நீக்கியுள்ளனர். அவர்களுடைய முகப்புத்தக பக்கங்களில் இன்னும் குறித்த நிகழ்வுக்கான விளம்பரங்களும் பதிவுகளும் உள்ளன.பிந்திய தகவல்களின் படி மீள டிசம்பர் 11ம் திகதிக்கு மாற்றியுள்ளனர்

 

Related Posts