முதலமைச்சராக விக்கியை தெரிவு செய்ய அன்று நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன் என இன்று(5) ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்பவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
முதலமைச்சராக விக்கினேஸ்வரனை தெரிவு செய்ய கூட்டமைப்பு ஏகமனதாகவே முடிவு செய்தது . மாவை சேனாதிராஜா பரிபூரணமாக ஏற்றுக்கொண்டிருந்தார். அதை அவரிடம் தெரிவிக்க மாவை சேனாதிரோசாவும் வந்திருந்தார். முதலமைச்சராக விக்கியை தெரிவுசெய்ய அன்று நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன்.முதலமைச்சர் ஒரு துவேசவாதி இல்லை என்று மகிந்த இராஜபக்சவே கூறியுள்ளார். அவர் முதலமைச்சராக மக்களின் கருத்துக்களையே கூறியுள்ளார்.
இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட யாப்புக்கள் யாவும் நாட்டின் எல்லா மக்களின் சம்மதமி்ன்றியே நிறைவேற்றப்பட்டன. 1956 தொடக்கம் நாட்டில் எமது சம்மதமின்றியே நாம் ஆளப்படுகின்றோம்
தற்போது மாற்றம் ஒன்றினை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு வரைவு தொடர்பில் நாம் 36 சுற்று பேச்சுக்களை இது வரை நடாத்தியுள்ளோம் 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் அவை விரைவில் அரசியல் சாசன சபைக்கு சமப்பிக்கப்பட உள்ளன.
56 ம் ஆண்டு தொடக்கம் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்வுகளின் அடிப்படையில் தீர்வு அமைய வேண்டு்ம்.இந்நாட்டின் சகலமக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல் யாப்பு அவசியம்.சகல மக்களும் தமது இறைமையுடன் தம்மை நிருவகிக்கும் வகையில் அது அமையவேண்டும்ஃ தற்போது 2/3 பெரும்பான்மையில் பொருத்தமாக அரசியல்யாப்பை நிறைவேற்றக்கூடிய நிலை உள்ளது.தை நாம் ஒற்றுமையாக நின்று பாவிக்கவேண்டும்.
நமது மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் ஆனால் எமக்கு தேவையான சட்ட ரீதியான உள்ளடக்கங்கள் ஒரு தீ்ர்வில் ஏற்படுமாக இருந்தால் இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது ஏன் என்றால் அதிகாரம் எமது கையில் வருவது அத்தியாவசியமானது. விசேடமாக நிர்வாகம் அதிகாரம் எமக்கு வேண்டும்.
[நன்றி:காணொளி – Kajeepan ]
காலைக்கதிர் உதயம் பெற்றிருக்கும் இந்நேரம் எமது மக்களுக்கு ஒரு அதிமுக்கியமான நேரம் .மக்களை நாம் சரியாக வழிநடாத்த வேண்டும். அவர்கள் சகல தகவல்களையும் அறிய வேண்டும் அந்தப்பணியை செய்யவேண்டும். அது பக்கசார்பாகவோ அரசியல் ரீதியாகவோ தொழிற்படக்கூடாது. என குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வில் முதல்வர் விக்கியும் சம்பந்தரும் அருகருகே அமந்திருந்தனர். அடிக்கடி பேசிக்கொண்டனர். வலது புறமாக அமர இருந்த முதலமைச்சரை பேசுவதற்கு வசதியாக .இடதுபுறமாக அழைத்துக்கொண்டார் சம்பந்தர். விக்கி தொடர்பில் எந்தவித குற்றச்சாட்டுக்களையும் சம்பந்தர் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் வித்தியாதரன் முன்னர் உதயன் பத்திரிகையின் ஆசிரியாராக பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.