வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 460 ஏக்கர் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை பொது மக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த பாதுகாப்பு வலய எல்லையில் மக்கள் அழைக்கப்பட்ட நிலையில் அங்கு இராணுவத்திரால் வெடிபொருட்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டதன் வெடிக்காத வெடிபொருட்கள் இருந்தால தமக்கு அறிவிக்கும் படியும் எனவும் தெரிவித்ததுடன் மதியம் 12 மணியளவில் மக்கள் தமது காணிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதன் படி தையிட்டி தெற்கு, தையிட்டி கிழக்கு, தையிட்டி வடக்கு,ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படுவதுடன் காங்கேசன்துறை தெற்கின் ஒரு பகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விடுவிக்கப்பட்ட பகுதியில் 2 படைமுகாம்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது