பண்டித் அமரதேவவின் மரணத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று (03) முதல் எதிர்வரும் ஒரு வார காலத்தை துக்க வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி, அரச காரியாலயங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது.
இதேவேளை மரணமடைந்துள்ள பண்டித் அமரதேவவின் வைத்திய சிகிச்சைக்கான சகல மருத்துவ செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு கட்டவுள்ள சகல கொடுப்பனவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் செலுத்தவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.