வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்களால் 2.11.2016 அன்று அவரது முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட அழைப்பிதழ் சம்பந்தமாக சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .புத்தளம் பாரளுமன்ற உறுப்பினருக்கு வடக்கு மாகாணசபையுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் கௌரவிப்பு விழா நவம்பர் 6ம் திகதி எடுப்பதாக இந்த அழைப்பிதழ் கூறுகின்றது. அத்துடன் ஏற்பாட்டாளர்களாக கல்வி அமைச்சின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது அத்துடன் அரச இலச்சனையும் வடக்கு மாகாணசபை இலச்சனையும் பயன்படுத்தியுள்ளனர்.
”ஒருவர் செய்த செயல்களுக்காக பாராட்ட மக்கள் சுயாதீனமாக விழா எடுக்கலாம். ஆனால் வடக்கு மாகாணசபையின் ஒரு அமைச்சு தனிப்பட்ட ஒருவருக்கு இவ்வாறு விழா எடுக்க ஏற்பாட்டாளராக முடியுமா? அப்படியாயின் நிறையப்பேருக்கு அந்த அமைச்சு விழா எடுக்கவேண்டியிருக்குமே! வடக்கு மாகாண சபையில். மக்கள் பணம் வீணடிக்கப்படுகின்றதா ? அதிபர்கள் தனிநபர்கள் சமூக சேவர்கள் என அனைவருக்கும் ஒவ்வொரு சமூகத்தின் பேரிலும் கோரினால் அமைச்சு இணைந்து விழா எடுக்குமா? எல்லா பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள் இனி பழைய ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு செய்ய கல்வியமைச்சு தொடர்நது அனுசரணை வழங்குமா ” என சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எழுப்பட்டுள்ளது.
பலத்த எதிர்ப்புக்களின் பின்னர் இன்னும் ஒரு அழைப்பிதழை அஸ்மின் அடுத்தநாள் பகிர்ந்தார். 1990 ம் ஆண்டுக்கு முன் யாழ்ப்பாணத்தில் கல்விப்பணியாற்றிய முஸ்லிம் ஆசிரியர்களுக்கு முல்லிம் சிவில் சமூகம் வடமாகாணசபையுடன் இணைந்த நடாத்தும் ஒன்றுகூடல் 2016 இல் கௌரவிப்பு நடைபெற உள்ளதாக அதில் தெரிவி்க்கப்பட்டிருந்தது.நிகழ்வு நவம்பர் 05,06ம் திகதிகளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற உள்ளது.
ஒரு சமூகக்குழுமம் சார்பில் தனியாக ஒரு ஆசிரியர் கௌரவிப்பு தனிப்பட நடாத்துவதற்கு எவ்வாறு கல்வி அமைச்சு ஏற்பாட்டாளராக அமையமுடியும் என்ற எதிர்ப்பு வலுத்துவருகின்றது. இது ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூகங்கள் அமைப்புக்கள் தம்பாட்டில் செய்யும் தாங்கள் சமூகம் சார்ந்த நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் அமைச்சு அனுசரணை வழங்கிக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்திவிடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சுக்கும் முதலமைச்சருக்கும் முறையிடப்பட்டுள்ளது.
முன்னர் வெளிவந்த அழைப்பிதழ்
பின்னர் வெளிவந்த அழைப்பிதழ்