2019ஆம் ஆண்டளவில் சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் கூறுகையில்
நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் போதியளவு ஆசிரியர்களை வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியொன்று பின்பற்ற ப்படும்.13ஆம் ஆண்டுகள் கட்டாயக் கல்வி தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டம் 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்க ப்படும்.ஒவ்வொரு பாடசாலைக்கும் தேவையான ஆசிரியர்களை தனித்தனியாக வழங்கத் தேவையான சட்டங்கள் உருவா க்கப்படும்.
கற்பிக்கும் தரத்தை உயர்த்துவதற்கு புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்படும்.ஆசிரியர் பற்றாக்குறையற்ற பாடசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.உயர்தர மாணவ மாணவியருக்கு டப்லட் வழங்கப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.